இந்திய துறையே அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்றாக தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜயுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் முந்தைய படமான ‘விக்ரம்’ படத்தின் இமாலய வெற்றியினால் இப்படத்திற்கு கூடுதல் கவனம்பெற்று வருகிறது. செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அனிரூத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற, முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பில் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். முன்னதாக இப்படத்தின் டைட்டில் முன்னோட்டம் வெளியாகி பெரும் கவனம் பெற்று டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

மாஸ் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் லியோ படத்தில் இதுவரை கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். மேலும் இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே சில காட்சிகள் படமாக்கப் பட்டதையடுத்து தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் மாதம் 29 ம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது உடலை மெருகேற்றும் ஜிம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சஞ்சய் தத்தின் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இந்த முன்னேற்பாடுகள் விஜய் நடிக்கும் லியோ படத்திற்காக என்ற கருத்துகளும் தற்போது வைரலாகி வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் பல தசாப்த்தங்களாக இந்தி படங்களில் நடித்து இந்திய முழுவதும் பிரபலமானது, சமீபத்தில் அவர் முக்கிய கதை கொண்ட படங்களான பல மொழி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதன் படி முன்னதாக இவரது நடிப்பில் வெளியான கேஜி எப் 2 திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதனாலே விஜய் நடிக்கும் லியோ படத்திற்கும் தனி எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.