தாய்லாந்தில் நடைபெற்று வரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தளபதி 68 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தளபதி விஜய் தாய்லாந்து புறப்பட்டு இருக்கிறார். நேற்று முன்தினம் நவம்பர் 1ம் தேதி லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட தளபதி விஜய் இன்று நவம்பர் 3ம் தேதி தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பதற்காக தற்போது தாய்லாந்து புறப்பட்டு இருக்கிறார். அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்து புறப்படுவதற்காக வந்த நடிகர் விஜயின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன.

தனக்கென தனி பாணியில் பக்கா எண்டர்டெயின்மென்ட் திரைப்படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை இயக்குகிறார். தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதமே தளபதி 68 திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் முன்னதாக தொடங்கப்பட்டது. தொடர்ந்து தளபதி 68 படப் பூஜை கடந்த அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் தளபதி 68 திரைப்படத்தில் மதன் கார்க்கி அவர்கள் பாடலாசிரியராக பணியாற்றுகிறார். சமீபத்தில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தளபதி 68 திரைப்படத்திற்கான ஒரு பாடலை எழுதி விட்டதாகவும் அந்த பாடல் படப்பிடிப்பு முடிந்து விட்டது என பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இரண்டாவது முறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. ரிலீஸான முதல் 12 நாட்களிலேயே 540 கோடிகளுக்கும் மேல் வசூலிக்க லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நவம்பர் 1ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. லியோ வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பிளாக்பஸ்டர் படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படங்கள் தளபதி விஜய் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தளபதி 68 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. வெள்ளை நிற முழுக்கை சட்டை நீல நிற ஜீன்ஸ் பேண்ட் என சிம்பிளாகவும் கூலாகவும் வந்த தளபதி விஜயின் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ...

#Thalapathy68 படப்பிடிப்பிற்காக Thailand புறப்பட்டார் தளபதி விஜய்!#Thalapathy @actorvijay #ThalapathyViiay #Leo #LeoIndustryHit #LeoSuccessMeet #Vijay #Galatta pic.twitter.com/5YPNK8GLPU

— Galatta Media (@galattadotcom) November 3, 2023