ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சிவா பகிர்ந்து கொண்டார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவை கொண்டாடும் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்கள் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் எனும் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் #தலைவர்170 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா சினிமா சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவா ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், இப்போது ரஜினிகாந்த் அவர்களின் படத்திற்கு சண்டை காட்சி CHOREOGRAPH செய்வது என்பது மிகவும் பயங்கரமான விஷயம். அவருடைய ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் ஸ்டைலாக அவர் எப்போதும் செய்து விடுவார். ஆரம்பக் கட்டத்தில் ஒரு மாதிரியாக இருந்தது. 80களின் சமயத்தில் ஒரு ஸ்டைலாக இருந்தது, 90களில் வேறு ஒரு ஸ்டைலாக இருந்தது. அந்தந்த கால கட்டத்திற்கு தகுந்த மாதிரி அவருக்கு எது கம்ஃபர்ட்டபிளாக இருக்கிறதோ அதை அவர் கையாளுகிறார். இதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? என கேட்டபோது,

“நான் முதல் முதலில் அவரோடு (ரஜினிகாந்த்) பாண்டியன் படத்தில் பணியாற்றினேன் அதை தொடர்ந்து எஜமான் படத்தில் பணியாற்றினேன் பின்னர் மன்னன். அதன் பிறகு முத்து திரைப்படத்தில் மொத்த படத்திற்குமான சண்டைக் காட்சிகளின் கம்போசிங் நான் தான் செய்தேன். அந்தச் சாரட் வண்டி ஓட்டுவது, சாட்டையை எப்படி கையில் ஸ்டைலாக பிடிப்பது என அவருடைய மொத்த விஷயங்களையும் நான் தான் செய்தேன். நானும் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகன் என்பதால் அவருக்கு எப்படி கம்போஸ் செய்ய வேண்டும் என தெரியும். இப்போது அதை என்னுடைய மகனுக்கு சொல்லிக் கொடுத்து இப்போது என்னுடைய மகன் கெவினும் நானும் சேர்ந்து ஜெயிலர் படத்தில் பணியாற்றி இருக்கிறோம். ஒரு ரசிகன் ஒரு ஃபைட் சீன் எடுத்தால் எப்படி இருக்கும் அதை நீங்கள் பார்ப்பீர்கள், எவ்வளவு ஸ்டைலாக செய்திருக்கிறோம் என பார்ப்பீர்கள்." என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டண்ட் சிவா அவர்கள், “ஸ்டைல் என்பதை அவரிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் மட்டுமல்ல நிறைய ஹீரோக்களே கற்றுக் கொள்ள வேண்டும். இதில் அவருக்கு ஃபைட் வைக்கும் போது அவரே வியப்படையும் மாதிரி தான் வைத்திருக்கிறோம். அது பற்றி இப்பொழுது நிறைய பேச முடியாது. படம் நன்றாக வந்திருக்கிறது.கிளைமாக்ஸ் எல்லாம் வேற லெவலில் இருக்கிறது நல்ல ஆக்சன் நல்லா வந்திருக்கு” என ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவா தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட ஸ்டன் சிவா அவர்களின் முழு பேட்டி இதோ…