ஆரம்பகட்டத்தில் நடன கலைஞராக கூட்டத்தில் ஒருவராக தனது திரை பயணத்தை தொடங்கி, பின் தனக்கே உரித்தான ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த ராகவா லாரன்ஸ், நடன இயக்குனராக வளர்ந்து, நடிகராவும் இயக்குனராகவும் அசத்தி பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருகிறார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது லாரன்ஸ் நடித்து வருகிறார். சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மூன்று பாடல்களும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாக சமீபத்தில் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். வருகிற விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து பெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தனது ஃபேவரட் ஹாரர் காமெடி சீரியஸாக மக்களுடைய வெற்றி பெற்ற காஞ்சனா சீரிஸ் இன் அடுத்த திரைப்படத்திற்கான கதையை தற்போது ராகவா லாரன்ஸ் எழுதி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக திகழும் கதிரேசன் அவர்கள் முதல் முறை இயக்குனராக தனயு FIVE STAR CREATIONS தார்பில் தயாரித்து இயக்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தின் முக்கியமான நகைச்சுவை காட்சி ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லியுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் கலக்கும் கலகலப்பான இந்த நகைச்சுவை குல்ஃபி காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…