சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் சில சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று இயக்குனர் அமீர் - நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இடையிலான விவகாரம். சமீபத்தில் நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது வெறும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமல்லாமல் நடிகர் கார்த்தியின் 25வது படத்தை கொண்டாடும் வகையிலும் அவரது 20 ஆண்டு திரைப்படத்தை கொண்டாடும் வகையிலும் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் கார்த்தியை கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் அவர்கள் கலந்து கொள்ளாதது பல கேள்விகளை கிளப்பியது. இது குறித்து இயக்குனர் அமீர் அவர்களிடம் கேட்டபோது, தன்னை அழைக்கவே இல்லை என்று பதில் அளித்துள்ளார். மேலும் இயக்குனர் அமீர் அவர்களுக்கு நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் நன்றியை மறந்து ஏதோ துரோகம் செய்துவிட்டனர் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்திருக்கும் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளரும் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவருமான KE.ஞானவேல் ராஜா அவர்கள் இந்த சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில்,

“இது 18 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் என்ன பிரச்சனை என்றால் அவர்தான் (இயக்குனர் அமீர்) பிரச்சனை. அவருக்கு அவரே பிரச்சனை, வெளியில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதற்கு நாம் தீர்வு கொடுக்கலாம் அவருக்கு அவரே பிரச்சனை எனும் போது நாம் என்ன சொல்வது. அன்று பேட்டி கொடுத்தார் "இவர்கள் எல்லாம் தப்பு அவர்கள் எல்லாம் தப்பு" என்று பேட்டி கொடுத்தார். அவர் பேட்டி கொடுத்தபோது நான் சிவக்குமார் சாருக்கு போன் செய்தேன். “ஐயா இப்படி பேசி இருக்கிறார் இதற்கு நான் பதில் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் எல்லோரைப் பற்றியும் தவறாக பேசியிருக்கிறார் உங்களைப் பற்றியும் தவறாக பேசியிருக்கிறார் எங்களை விடுங்கள் உங்களை பற்றி தவறாக பேசியிருக்கிறார். அதற்காகவாவது நான் பதில் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கேட்டேன். அவர் சொன்ன ஒரே வார்த்தை இதுதான் “நீ உன்னையே நல்லவன் என்று சொல்லிக் கொண்டாலும் அமீர் அவரையே நல்லவன் என்று சொல்லிக் கொண்டாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இருவருக்குமே மிகப்பெரிய கேரியர் இருக்கிறது எனவே ஒரு 15 - 20 வருடங்கள் போகட்டும் அது போன பிறகு நீ நல்லவனாக இருந்தால் நீ நல்லவன் என்று மக்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் அவர் நல்லவனாக இருந்தால் அவரை நல்லவன் என்று தெரிந்து கொள்ள போகிறார்கள் வாழ்கிற வாழ்க்கை தான் உனக்கு பதிலாக இருக்க வேண்டுமே தவிர ஒரு வார்த்தை கூட உன்னுடைய இயக்குனரை காயப்படுத்துகிற மாதிரி நீ பேசக்கூடாது. என்றாக இருந்தாலும் அவர் உன்னுடைய இயக்குனர் அவரை காயப்படுத்துகிற மாதிரி நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது” என்றார். எனவே அவர் (இயக்குனர் அமீர்) எவ்வளவு குற்றச்சாட்டுகள் சொன்னாலும் எதிலுமே உண்மை இல்லை என்றாலும் நான் இதுவரை யாருக்குமே எந்த பதிலும் நான் கொடுத்தது கிடையாது. மீண்டும் கார்த்தியின் 25வது படம் நடக்கும்போது அந்த நிகழ்ச்சிக்காக கார்த்தி இயக்குனர் அமீர் அவர்களை தொடர்பு கொள்கிறார் “நேரில் வந்து அழைக்கட்டுமா” என்று கேட்கிறார். இது அவருக்கும் தெரியும். இருந்தும் அவர் இப்போது பேட்டி கொடுக்கிறார் அவரை “யாரும் கூப்பிடவே இல்லை” என்று... அவரை கூப்பிடாமல் எல்லாம் இல்லை அவரை கூப்பிடும் போது அவர் கத்தி இருக்கிறார். “என்னை அதற்கு கூப்பிடவில்லை இதற்கு கூப்பிடவில்லை இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள்” என்று கத்தி இருக்கிறார். கூப்பிட போன இடத்தில் கத்தி இருக்கிறார் எனவே கத்திய பிறகு எப்படி ஒருவர் போய் மீண்டும் தொடர்பு கொள்வார்."

என பதில் அளித்துள்ளார் அந்த முழு பேட்டி இதோ...