எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வரும் ஜனவரி 11 பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் படம் 'துணிவு' . ஜிப்ரான் இசையில் பாடல்கள் முன்னதாக வரவேற்பை பெற்றது. மேலும் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மக்கள் மத்தில் வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது. நிரவ் ஷா ஒளிப்பதிவில் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. மற்றும் படத்தொகுப்பாளராக விஜய் வேலுக்குட்டி பணியாற்றுகிறார். துணிவு படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்த உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மற்றும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிகாலை 1 மணி காட்சிகளை தக்கவைத்துள்ள துணிவு படத்தின் இறுதிகட்ட விளம்பர பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்த நாட்களையும் விடுமுறை நாட்களையும் கருத்தில் கொண்டு முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. அஜித் ரசிகர்களின் கோலாகலமான கொண்டாட்டங்களுடன் துணிவு படத்தின் வரவேற்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துணிவு படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் நடைபெற்றது இதில் நடிகை ஷாலினி அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், மற்றும் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என தகவல் வெளியானது. அதன்படி துணிவு படத்தை பார்த்து விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளத்தில் அவருடைய தற்போதைய புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் “சற்று முன் துணிவு படத்தை பார்த்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித் இயக்குனர் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தாயரித்த படம் துணிவு படம் வெளியாக இரண்டே நாள் மட்டும் இருக்கின்றது. இதனையடுத்து தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு படத்தை பார்த்தேன் என்ற பதிவு அஜித் ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

பிரபல பாலிவுட் தாயரிப்பாளரான போனி கபூர் அஜித் நடித்து எச் வினோத் இயக்கத்தில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் தமிழில் களம் இறங்கினார். பின் அதே கூட்டணியில் 'வலிமை' படத்தையும் தயாரித்து வெளியிட்டார். இதனிடையே 'வீட்ல விசேஷம்', 'நெஞ்சுக்கு நீதி' போன்ற படங்களையும் தமிழில் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.