ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் அடுத்ததாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தை தில் ராஜு, தனது வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தயாரித்துள்ளார்.

பக்கா பேமிலி என்டர்டைனர் படமாக வெளிவந்திருக்கும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த வாரிசு படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன்.KL பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் நீளம்( Run Time) வெளியான சமயத்தில் இருந்து அது பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பியது அதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்டபோது, "அந்த நேரத்தில் நாங்கள் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு இருந்ததால் அதை முடிவு செய்துவிட்டோம். படத்தின் நீளம் குறித்து கவனத்தோடு இருந்தோமா என்றால் அந்த கவனம் இருந்தது. எந்த படத்திற்கும் அப்படி ஒரு கவனம் இருக்கும். நீளம் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற கவனமெல்லாம் இருக்கும். அதை வைத்து ஒரு படத்தை எடை போடுகிறார்கள் என்றால் அது கஷ்டம் தான். ஒரு கன்டன்ட்டை பார்க்காமல் ஒரு படத்தின் நீளத்தை மட்டும் பார்த்து இது நல்லா இருக்கும் நல்லா இருக்காது என்ற முடிவுக்கு வருவது தவறானது" என படத்தொகுப்பாளர் பிரவீன்KL தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…