சமந்தா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம் ‘சாகுந்தலம்’ . மகாகவி காளிதாசர் எழுதிய புரானகதையான ‘சாகுந்தலம்’ கதையை அடிப்படையாக கொண்டு சரித்திர கதையாக படமாக்கபட்டுள்ள இந்த படத்தை ருத்ரமாதேவி திரைப்படத்தின் இயக்குனர் குணசேகர் எழுதி மிகப்பெரிய பொருட்செலவில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து தேவ்மோகன், சச்சின் கேதேகர், பிரகாஷ் ராஜ், மதுபாலா, கெளதமி,அதிதி பாலன்,மோகன் பாபு ஆகியோர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அல்லு அர்ஜுன் மகன் அல்லு அர்கா நடித்துள்ளார். இப்படத்தினை வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.

பிரம்மாண்டமாய் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் சாகுந்தலம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் பிரம்மாண்டமாக வெளியாகவிருந்த இந்த திரைப்படம் சில பட வேலைகள் நிலுவையில் இருந்ததால் படத்தின் வெளியீட்டு தேதியை பிப்ரவரி 17 ம் தேதி தள்ளி வைத்தது. அதன் படி மிக மும்முரமாக படத்தின் விளம்பர வேலையில் இறங்கினார் சமந்தா மற்றும் படக்குழுவினர். இந்நிலையில் சமீபத்தில் படத்தின் வெளியீட்டு தேதி சில காரணங்களில் மீண்டும் தள்ளி போனது. இதனையடுத்து சமந்தாவை திரையில் பார்க்கும் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இரண்டு முறை வெளியீடு தேதி தள்ளி போன சாகுந்தலம் திரைப்படம் தற்போது அதன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அறிவிப்பின் படி சாகுந்தலம் திரைப்படம் இந்தியா முழுவதும் பல பகுதிகளில் வரும் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாகும் என் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து படக்குழுவினரின் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா தென்னிந்தியாவில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவர் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய நடிகையாக கவனம் பெற்றவர் சமந்தா. மேலும் பாலிவுட்டில் பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய திரைப்படங்கள் வெளியானது. தற்போது சமந்தா விஜய் தேவர்கொண்டா வுடன் இணைந்து ‘குஷி; படத்திலும் மற்றும் பேமிலி மேன் இயக்குனரின் அடுத்த படைப்பான சிடாடேல் தொடரிலும் நடிக்கவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.