தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டுமே தனித்துவமான ரசிகர்கள் நம்பிக்கையுடன் அந்த நட்சத்திரத்தின் படங்களை அணுகுவார்கள். அந்த வகையில் அறிமுகமான அன்றிலிருந்து இன்று வரை குடும்பங்கள் கொண்டாடும் நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் ஜெயம் ரவி. பல தசாப்த்தங்களாக பல பிளாக் பஸ்டர் படங்களை குடும்பங்கள் ரசிக்கும் அளவு கொடுத்து அவர்கள் திருப்தி ஆகும் அளவு படங்களை கொடுப்பவர். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் முன்னணி கதாபாத்திரமான பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜெயம் ரவி அதிகம் ரசிகர்களால் பாராட்டப் பட்டார். அதன் பின் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் படங்களான பொன்னியின் செல்வன் பாகம் 2 , அகிலன், இறைவன் ஆகிய படங்களின் அறிவிப்புகள் சமீப காலமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தொடர் அப்டேட்டுகளை குவித்து வரும் ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘அகிலன்’ ஜெயம் ரவியின் 28 வது படமாக அமைந்துள்ள இப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன். ஸ்க்ரீன் சீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், தான்யா ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்ஷோசம் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அகிலன் திரைப்படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி ரசிகர்கலினி கவனத்தை பெற்ற நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான ‘துரோகம்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழுவினர். சாம் சி எஸ் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை சாம் சி எஸ் மற்றும் சிவம் பாடியுள்ளனர். ‘துரோகம் பண்ணு’ என்று துவங்கும் இப்பாடல் சமூக நிலைகளில் மனிதன் சுயநலமாய் வாழ்கிறான் என்ற கருவை கொண்டு பாடல் அமைந்துள்ளது. அட்டகாசமான துள்ளல் இசையுடன் தற்போது இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகின்றது.

வித்யாசமான தோற்றத்தில் துறைமுகம் சார்ந்த கதைதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 10 ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.