“சம்யுக்தா பற்றி தனுஷ் சொன்னது நடந்துடுச்சு” - வாத்தி பட இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. - முழு வீடியோ இதோ..

வா வாத்தி பாடல் குறித்து அனுபவத்தை பகிர்ந்த இசையமைப்பாளர் - Vaathi Music Director GV Prakash kumar about Vaa Vaathi Song | Galatta

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் தெலுங்கு அகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட ‘வாத்தி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17 வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களின் பேராதரவோடு வெளியான நாள் முதல் இன்று வரை தமிழ்நாடு , ஆந்திரா மற்றும் தெலுங்கான பகுதிகளில் வெற்றிகரமாக 10 நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும் விமரசன ரீதியாகவும் வெற்றிப்பெற்ற வாத்தி திரைப்படத்தின் படமாக்கம் மற்றும் பாடல் உருவான விதம் குறித்து படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் ஆகியோர் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில்  வா வாத்தி பாடல் குறித்து பேசுகையில்,

"நீங்கள் இதை நம்பமாட்டீர்கள்.. வா வாத்தி பாடல் வெளியான போது டிஜிட்டல் உலகம் ஸ்தம்பித்தது. Spotify போன்ற பல தளங்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள் .  பாடல் அதிகமான ஸ்ட்ரீம் நம்பரை பெற்றுவருகிறது. இது சாத்தியமே இல்லை. என்று ஆச்சரியத்துடன் வார்த்தைகளை பகிர்ந்தார்கள். அந்த பாடல் தெலுங்கில் 1 கோடியை  ஸ்ட்ரீம் பெற்றுள்ளது. தமிழில் 2 முதல் 3 கோடியை தாண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 4 கோடி எட்டியுள்ளது.” என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.

மேலும் தொடர்ந்து வெங்கி அட்லூரி, "எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கு அந்த பாடல் படமாக்கி வரும் போது  தனுஷ் சார் சம்யுக்தாவிடம் 'நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் இந்த பாடல் உங்களை ஸ்டார் ஆக்கும்' என்றார். தற்போது அதுதான் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது.  படம் வெளியான போது தான் ஒரு நடிகை எப்படி ஸ்டார் ஆகிறார் என்பதை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் அந்த பாடலில் சம்யுக்தா வரும்போது மக்கள் கைத்தட்டுகிறார்கள், விசில் அடித்து கூச்சலிட்டு கொண்டாடுகிறார்கள். பலருடைய தொலைபேசியில் அதை பதிவு செய்கிறார்கள். அந்த நொடி கிட்டத்தட்ட ஒரு பிரம்மாண்டமான பாடல் நிகழ்ச்சி போன்று இருந்தது. படத்தில் எப்போது எந்த காட்சியில் சம்யுக்தா வந்தாலும் கைத்தட்டுகிறார்கள். அந்த பாடல் அவரை நட்சத்திரமாக்கி விட்டது.” என்றார்.

பின் ஜிவி பிரகாஷ், "இந்த பாடலுக்கான வரவேற்பு தமிழில் மட்டுமல்ல, ஆந்திர திரையரங்குகளிலும் நடந்தது. தமிழில் பாடலுக்கு நானும் தனுஷும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் நினைத்தபடி பாடல் நல்லாவே வந்தது. ஆனால் தெலுங்கில் அந்த பாடலுக்கான வரிகளில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை. ஆனால் இயக்குனர் சரியான பாடலாசிரியரை பிடித்துள்ளார்." என்றார்.

மேலும் இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான கொண்ட வீடியோ இதோ..

Smart phone க்கு ‘சிம்ரன்’ பெயர் வெச்ச காரணம் இதுதான்! - சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த சிவா.. வீடியோ இதோ..
சினிமா

Smart phone க்கு ‘சிம்ரன்’ பெயர் வெச்ச காரணம் இதுதான்! - சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த சிவா.. வீடியோ இதோ..

“ஏழை கையில் ரத்தினம் நீ” வெளியானது டாடா படத்தின் ‘தாயாக நான்’ பாடலின் வீடியோ.. – வைரலாகும் கவின் பதிவு இதோ..
சினிமா

“ஏழை கையில் ரத்தினம் நீ” வெளியானது டாடா படத்தின் ‘தாயாக நான்’ பாடலின் வீடியோ.. – வைரலாகும் கவின் பதிவு இதோ..

பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் -  யார் இந்த பிரபலம்.. விவரம் உள்ளே..
சினிமா

பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் - யார் இந்த பிரபலம்.. விவரம் உள்ளே..