நமது கலாட்டா பிளஸ் சேனலில் 2023 ஆம் ஆண்டிற்கான கலாட்டா பிளஸ் மெகா தமிழ் ரவுண்டு டேபிள் நிகழ்ச்சி நடைபெற்றது. திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்த அட்டகாசமான இயக்குனர்களின் ரவுண்டு டேபிள் நிகழ்ச்சியில் இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனரான மணிரத்னம் அவர்களுடன் இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் சுதா கொங்காரா, இயக்குனர் மாரி செல்வராஜ், மண்டேலா மற்றும் மாவீரன் படங்களின் இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் கூலாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் கடந்த இயக்குனர் மணிரத்னம் முதல் கடந்த ஆண்டு தரமான ஒரு படைப்பை கொடுத்த புதுமுக இயக்குனர் வினோத் ராஜ் வரை என தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் இணைந்திருக்கும் இந்த அசத்தலான ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் இருந்து கேள்விகள் ஆரம்பமாகின. அப்படி பேசுகையில், “இப்போது நாம் அனைவரும் இங்கே ஏன் இணைந்திருக்கிறோம் என்றால் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் THUG LIFE படத்தின் கதையை நமக்கு சொல்லப் போகிறார்.” என சொன்னதும், “அப்படி என்றால் மிகவும் சீக்கிரமாக முடிந்து விடும்” என இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம், “இப்போது தான் அந்த ப்ரோமோ வெளியானது. அதை பார்த்த எல்லோருக்கும் “வாவ் இதைத்தான் மணிரத்தினம் அவர்கள் காட்டப் போகிறாரா?” என்று இருந்தது. ஏனென்றால் இதை இதுவரை உங்களிடம் இருந்து யாரும் பார்த்ததில்லை இது உங்களுடைய 40வது வருடம்... நீங்கள் ஒரு ஜானரை தொட்டீர்கள் என்றால்.. மீண்டும் அடுத்து அந்த ஜானர் பக்கம் போகவே மாட்டீர்கள். நீங்கள் வேறு ஒன்று செய்வீர்கள்... அதாவது கணிக்க முடியாதது. அடுத்த மணிரத்தினம் படம் என்றால் அது எப்படி இருக்கும்? என்னவாக இருக்கும்? என்ன சப்ஜெக்டாக இருக்கும்? என்று யாருமே எதுவும் கணிக்கவே முடியாது. அப்படி கணிக்க முடியாதபடி இருப்பது தான் உங்களுடைய இந்த நீண்ட கரியருக்கு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக் கேட்டபோது,

"எதிர்பார்த்தபடி பண்ண வேண்டும் என்றால் நீங்கள் "ஜீனியஸ்" ஆக இருக்க வேண்டும் நீங்கள் ஒரு சாப்ளினாக இருக்க வேண்டும் நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை செய்வதற்கு... இங்கே நிறைய பேர் அதை செய்கிறார்கள் அதுவும் சிறப்பாக செய்கிறார்கள் அது அபாரமானது. அது முடியாது என்றால் கணிக்க முடியாத மாதிரியான பாதையை தேர்ந்தெடுப்பது நல்லது. அந்த பக்கம் குதிப்பது தான் நல்லது. அது கொடுக்க கூடிய மிகப்பெரிய அட்வான்டேஜ் என்னவென்றால் உங்களை ரொம்ப பிரஷ்ஷாக வைத்துக் கொள்ளும். ஒவ்வொரு படங்களும் ஒரு புதிய படம் என்ற உணர்வை கொடுக்கும். அதை எப்படி எடுக்க போகின்றோம் என்று தெரியாது. உள்ள போய் உதிர்த்து அந்த பக்கம் வெளியில் வர வேண்டும். எனவே இது உதவுகிறது.” என இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பதில் அளித்து இருக்கிறார். இந்த அட்டகாசமான நிகழ்ச்சியின் முழு வீடியோ இதோ…