தளபதி விஜயின் திரை பயணத்திலேயே, தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஏன் இந்திய சினிமாவை பொறுத்தவரையிலும் என்று எடுத்துக் கொண்டால் கூட ஒரு திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு இருந்தே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்று சொன்னால் அது தளபதி 67 திரைப்படத்திற்கு தான். அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தனது ஃபேன் பாய் சம்பவமாக செய்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியும் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் இணைவதும் இந்த எதிர்பார்ப்புகள் அதிகரிக்க காரணங்களாக அமைந்தன. இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி 2ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் தயாரிக்க, ஜெகதீஷ் இணைந்து தயாரிக்க, தளபதி விஜய் நடிப்பில் தயாராகும் தளபதி 67 திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேதீவ் தாமஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில், தினேஷ் மாஸ்டரின் நடன இயக்கத்தில் உருவாகும் அதிரடி படமான தளபதி 67 திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த தளபதி 67 அப்டேட்டுகள் கடந்த சில தினங்களாக அதிரடியாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தெரிவிக்கும் வகையில் ரத்தம் தெறிக்கும் வகையில் அதிரடியான போஸ்டர் ஒன்றும் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சற்று முன் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் மிரட்டலான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.

இதுவரை இல்லாத அளவிற்கு இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பக்கா ஆக்சன் ட்ரீட்டாக அமைய இருக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி 67 என இத்தனை நாட்களாக உலா வந்த லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜயின் திரைப்படத்தின் மிரட்டலான முதல் ப்ரோமோ இதோ…