தமிழ் சினிமாவில் ‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலே வித்யாசமான கதைக்களத்தை கொண்டு ரசிகர்களை அதிகளவு கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இரண்டாவது படத்தில் நட்சத்திர நடிகரான கார்த்தியுடன் இணைந்து கைதி திரைப்படத்தை கொடுத்தார். படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட். ஒரு புதுவிதமான டிரென்ட் கொடுத்து மிக முக்கிய இளம் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜை தனித்துவப் படுத்தியது.

யாரும் எதிர்பார்க்காத அப்டேடுடன் வந்தார் லோகேஷ் கனகராஜ். மூன்றாவது படத்தில் தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகர் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை கொடுத்தார். லாக் டவுன் முடிந்து திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு அட்டகாசமான விருந்தாக அமைந்தது தளபதி விஜயின் மாஸ்டர். பின் உலகநாயகன் கமல் ஹாசன் திரைப்படமான ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி ரசிகர்களுக்கு மேலும் ஒரு சுவாரஸ்யமான கதைகளத்தை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக படத்தில் அவரது முந்தைய திரைப்படமான கைதி திரைப்படத்தின் கதைக் கருவை இணைத்து கார்த்தி, சூர்யா, கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் என ஒரு தனி திரையுலகத்தை உருவாக்கி ரசிகர்களுக்கு தனி புத்துணர்வை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் திரைப்படம் மூலம் தனி பிரிவை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், அவரது ரசிகர்கள் Lokesh Kanagaraj Cinematic Universe (LCU) என்ற பெயரை வைத்து பிரபலமடைய செய்தனர்.

தற்போது எங்கு பார்த்தாலும் தனி திரையுலகத்தை தொடங்கும் அளவு இந்திய அளவு லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரசிகர் Wikipedia தளத்தில் Lokesh Kanagaraj Cinematic Universe (LCU) என்ற பிரிவில் தனி கணக்கை உருவாக்கி வைத்துள்ளனர். இதில் லோகேஷ் கனகராஜ் அறிமுகம் மற்றும் LCU பிரிவில் இடம் பெரும் திரைப்படங்களை இணையேற்றி வருகின்றனர். இந்த செய்தி லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை உற்சாகப் படுத்தி அந்த பக்கம் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் தற்போது படக்குழு காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. ரசிகர்கள் இந்த படமும் லோகேஷ் கனகராஜின் LCU பிரிவில் வரும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கின்றார்.