இந்திய திரையுலகில் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் உலக நாயகன் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம். இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய திரைப்படங்களான ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தாலும் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய புகழை இந்திய அளவு கொடுத்தது, அதன் பின் அவருடைய அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தளபதி விஜயுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உச்ச நட்சத்திரமான விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கின்றது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது, தற்போது படக்குழு அடுத்த இரண்டு மாதத்திற்கான படபிடிப்புக்கு காஷ்மீர் சென்றுள்ளனர். இப்படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கவுள்ளார். மேலும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யவுள்ளார். இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாகவும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கவிருகின்றனர்.

படம் குறித்த தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக படகுழுவினாரால் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த தொடர் அப்டேட் தற்போது இணையத்தில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகின்றனர், மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் திறமையான தொழில் நுட்ப கலைஞர்களின் வேலைகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது படத்திற்கான டைட்டில் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ரத்தம் தெறிக்கும் வடிவில் விஜயின் தோற்றம் கொண்ட அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டு அதனுடன் லோகேஷ் நாளை மாலை 5 மணியளவில் தளபதி 67 படத்தின் தலைப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளார், இதனையடுத்து இணையத்தில் வெறித்தனமான போஸ்டருடன் இந்த அப்டேட் வைரலாகி வருகின்றது.

மேலும் தளபதி 67 படத்தின் போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தம் தெறிக்கும் போஸ்டர் உருவாக்கம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். லோகேஷ் பதிவுடன் இந்த பதிவும் வைரலாகி வருகிறது.

#Thalapathy67TitleReveal at 5pm tomorrow #Thalapathy @actorvijay na @trishtrashers @Dir_Lokesh @anirudhofficial @PriyaAnand @duttsanjay@Jagadishbliss #Thalapathy67 #handmade pic.twitter.com/3mdHRQG82j

— Gopi Prasannaa (@gopiprasannaa) February 2, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முந்தைய படமாக வெளியான விக்ரம் படத்தின் டைட்டில் வெளியீட்டை பிரத்யேகமாக வீடியோ மூலம் வெளியீட்டு புதுமையான அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்து அசத்தியிருப்பார்.அதன்படி நிச்சயம் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கும் அதுபோல் ஒரு சிறப்பு வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. நிச்சயம் நாளை மாலை 5 மணி இந்திய திரையுலகம் அதிகம் பேசும் படமாக தளபதி 67 திரைப்படம் இருக்கும்.