வரும் பிப்ரவரி மாதம் 17 ம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘வாத்தி’ தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படத்தை இயக்குகிறார் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி. கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார். இவருடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாகவும் சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையயில் படம் குறித்து பல சுவாரஸ்மான தகவல்களையும் தனுஷ் உடன் பணியாற்றிய தருணங்களையும் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் வாத்தி திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார்.

இதில் வாத்தி திரைப்படத்தில் தனுஷ் தோற்றம் எப்படி வடிவமைக்கப்பட்டது என்ற கேள்விக்கு, அவர்.

“வாத்தி தனுஷின் தோற்றத்தை நானும் தனுஷ் சாரும் கவனமுடன் கையாண்டோம். டீச்சர் கதாபாத்திரம் என்றாலே மூக்கண்ணாடி தோற்றத்தில் இடம் பெரும். அதை நாங்கள் செய்ய கூடாது என்று உறுதியாக இருந்தோம். அந்த கதாபாத்திரம் ஒரு விளையாட்டு தனமான வாத்தி. அந்த கதாபாத்திரம் பயத்துடன் கலந்த மரியாதை கொண்ட வாத்தியார் இல்லை. குறும்புத்தனத்துடன் பாடம் சொல்லி கொடுக்கும் எல்லாருக்கும் பிடித்தமான கதாபாத்திரம் மாணவர்களுக்கு ஒரு அண்ணா வை போல் இருக்கும் கதாபாத்திரம் அது. என்பதாலே தனுஷுக்கு இந்த தோற்றம் கொடுத்தோம்” என்றார்.

மேலும் தொடர்ந்து தமிழ் நடிகர்கள் தெலுங்கு திரையுலக இயக்குனருடன் கூட்டணி அமைப்பது அந்த படத்தின் விமர்சனம் கலவையாகவே வருகிறது. உதாரணமாக வாரிசு, பிரின்ஸ் படங்கள். அதன் வரிசையில் வாத்தி திரைப்படமும் வந்துள்ளது. நீங்கள் தமிழ் ரசிகர்களுக்கு என்ன வித்யாசமாக கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, “நான் இன்னும் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பார்க்கவில்லை.அதை பற்றி என்னால் இப்போது பார்க்கவில்லை. வாரிசு திரைப்படம் இங்கு மிகப்பெரிய வெற்றி. அதனால் நான் என் குருவான வம்சியின் பாதையில் பயணிக்க விரும்புகிறேன்” என்றார்.

மேலும் இயக்குனர் வெங்கி அட்லூரி படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ.