சமீப காலமாக தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பு தென்னிந்திய ரசிகர்களை தாண்டி இந்திய அளவில் விரிவடைந்துள்ளது. காரணம் தமிழ் சினிமா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை சமீபத்தில் பெற்று வருகிறது. மேலும் தமிழ் படங்களை மற்ற மொழியில் டப் செய்து வெளியிட்டாலும் அதற்கும் ஒரு மவுசு உள்ளது. இந்திய அளவில் இல்லாமல் உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் அடிக்கும் அளவு தமிழ் சினிமாவும் நட்சத்திரங்களின் புகழும் ஓங்கியுள்ளது என்றே சொல்லலாம். உதாரணமாக இந்த ஆண்டு வெளியான வாரிசு, துணிவு திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது.

இந்த வரிசையில் இந்த ஆண்டின் கோடை நாட்களையொட்டி வெளியாகவிருக்கும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்கள் என்ன அதன் வெளியீட்டு தேதி குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு கட்டுரை.

1. பார்டர்

'ஈரம்', 'ஆறாது சினம்', 'குற்றம் 23' ஆகிய தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரில்லர் திரைப்படங்களை கொடுத்து சமீபத்தில் கொடுத்து கவனம் பெற்ற இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தற்போது வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பார்டர்’ அருண் விஜய், ரெஜினா கேசெண்டரா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பார்டர் திரைப்படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது.

2. தசரா

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தசரா’. முரட்டு தனமான தோற்றத்தில் நானி நடித்து வரும் இப்படத்தின் டீசர் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நானி தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் பிரபலம் என்பதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள தசாரா திரைப்படம் வரும் மார்ச் 30 ம் தேதி இந்திய அளவில் வெளியாகவுள்ளது.

3. பத்து தல

கன்னடத்தில் மெகா ஹிட் திரைப்படமான ‘மப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரெமேக்கில் சிலம்பரசன் TR அட்டகாசமாக நடித்து திரைப்படம் ‘பத்து தல’. இப்படத்தை இயக்குகிறார் பிரபல இயக்குனர் ஒபெலி கிருஷ்ணா. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு படத்தின் அறிவிப்பிலிருந்தே உள்ளது. மேலும் எ ஆர் ரஹ்மான் இசையில் நம்ம சத்தம்’ பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்ககது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் TR உடன் இனைந்து கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

4. விடுதலை

ஜெயமோகன் சிறுகதையான ‘துணைவன்’ கதையை அடிப்படையாக கொண்டு பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி வரும் திரைப்படம் ‘விடுதலை’. மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் முதல் பாடல் இளையராஜா இசையில் தனுஷ் பாடிய ‘உன்னோடு நடந்தா’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5. ருத்ரன்

கமர்ஷியல் திரைப்படங்களில் பாக்ஸ் பெற்ற ராகவா லாரன்ஸ் நடித்து வரும் திரைப்படம்’ருத்ரன்’ அதிரடி ஆக்ஷன் நிறைந்த இப்படத்தை தயாரித்து இயக்கிறார் கதிரேசன். சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.வரும் ஏப்ரல் 14 ம் தேதி தமிழகமெங்கும் ‘ருத்ரன்’ வெளியாகவுள்ளது

6. பிச்சைக்காரன் 2

விஜய் ஆண்டனி நடித்து இயக்கி வரும் திரைப்படம் 'பிசைக்காரன் 2'. மிகப்பெரிய பிளாக் பஸ்டர் கொடுத்த திரைப்படமான 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டம் பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விபத்திலிருந்து குணமடைந்து விட்ட விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்திற்கான இறுதிகட்ட வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார். இப்படத்தை விஜய் ஆன்டணி வரும் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

7. பொன்னியின் செல்வன் 2

திரையுலக ஜாம்வான் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியானது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலகெங்கும் வசூல் வேட்டையாடி தமிழ் சினிமா மேலும் கவனம் பெற்றது. இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ம் தேதி வெளியாகவுள்ளது. வரும் நாட்களில் படத்திற்கான பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8.சிங்கப்பூர் சலூன்

தொடர்ந்து நான்காவது முறையாக கதாநாயகனாக நடித்து வெற்றியை பெற்ற ஆர் ஜே பாலாஜி நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பிரபல இயக்குனர் கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆர் ஜே பாலாஜி நடிப்பில் முன்னதாக வெளியான ரன் பேபி ரன் திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டம் ஓய்ந்த பின் இந்த படம் குறித்த அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சிங்கப்பூர் சலூன் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. சாகுந்தலம்

சமந்தா நடிப்பில் மிகபிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் சகுந்தலம். சரித்திர திரைப்படமாக முழுக்க முழுக்க 3D தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ம் தேதி தெலுங்கு, தமிழ் மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10. இறைவன்

என்றென்றும் புன்னகை, மனிதன் பட இயக்குனரின் அடுத்த படமாக உருவாகி வரும் ‘இறைவன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். மனிதன் வெற்றிக்கு பின் நீண்ட இடைவெளிக்கு பின் உருவாகவுள்ள படம் என்பதால் இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறைவன் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

11. ஜப்பான்

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஜப்பான். ஜிப்சி படத்திற்கு பின் கார்த்தியுடன் இணைந்த ராஜு முருகன் கூட்டணிக்கு ரசிகர்கள் பெருமளவு வரவேற்பு அளித்தனர் அதன்படி ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகி கவனம் பெற்றது. வரும் ஜூன் மாதம் ஜப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்.

12. மாவீரன்

மண்டேலா இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘மாவீரன்’. டான் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்ட்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13. அகிலன்

ஜெயம் ரவி வித்யாசமான தோற்றத்தில் துறைமுகம் சார்ந்த கதைகளம் கொண்டு அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான திரைப்படம் ‘அகிலன்’ கடந்த ஆண்டு இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், தான்யா ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருப்பார் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகவேண்டிய அகிலன் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.