சுழல் வெப்சீரிஸ் வெற்றிக்கு பின் அஜித்தின் சூப்பர் ஹிட் பட டைட்டிலில் கதிரின் புதிய படம்...  அசத்தலான வீடியோ இதோ!

கதிரின் ஆசை பட காதல் கண்ணாடி பாடல் லிரிக் வீடியோ,kathir in aasai movie kaadhal kannadi song out now | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் கதிர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக களமிறங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் கிருமி, என்னோடு விளையாடு ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. பின்னர் இயக்குனர்கள் புஷ்கர் & காயத்ரியின் இயக்கத்தில் மாதவன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விக்ரம் வேதா திரைப்படத்தில் புள்ளி எனும் மிக முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் கதிர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர் தனது மிகச் சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் பெற்றார். அடுத்தடுத்து சிகை மற்றும் சத்தரு ஆகிய படங்களில் நடித்த கதிர் தளபதி விஜய் உடன் பிகில் திரைப்படத்தில் இணைந்தார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி வெளிவந்து மெகா ஹிட்டான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கால்பந்தை மையப்படுத்திய ஜடா திரைப்படத்தில் நடித்த கதிர் நடிப்பில் அடுத்தடுத்து சர்பத், அக்கா குருவி மற்றும் யூகி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இதனிடையே வெப் சீரிஸிலும் தடம் பதித்த கதிர், இயக்குனர்கள் புஷ்கர் & காயத்ரி எழுதி தயாரிக்க, இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுசரன் முருகையன் இணைந்து இயக்க, வெளிவந்த சுழல் - The Vortex வெப் சீரிசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பார்த்திபன், ஷ்ரியா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த சுழல்-The Vortex வெப் சீரிஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் அடுத்ததாக கதிர் நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் ஆசை. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இஷ்க் திரைப்படத்தின் தமிழ் ரீமைக்காக ஆசை திரைப்படம் தயாராகி இருக்கிறது. ஏற்கனவே இஷ்க் திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேண்டஸி ஹாரர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜீரோ திரைப்படத்தின் இயக்குனர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர் மற்றும் திவ்ய பாரதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆசை திரைப்படத்தில் லிங்கா, பூர்ணா மற்றும் அலெக்ஸாண்டர் சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். EAGLE'S EYE ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், G.ஜெயராம் மற்றும் ரமேஷ்.P.பிள்ளை இணைந்து தயாரித்துள்ள ஆசை திரைப்படத்திற்கு பாபு குமார் ஒளிப்பதிவில், சுதர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முகிழ் படத்திற்கு இசையமைத்த ரெவா ஆசை திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆசை திரைப்படத்திலிருந்து காதல் கண்ணாடி எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது அசத்தலான காதல் கண்ணாடி பாடலின் லிரிக் வீடியோ இதோ…
 

தளபதி விஜய் படத்தில் நடித்த பிரபல நடிகையின் திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
சினிமா

தளபதி விஜய் படத்தில் நடித்த பிரபல நடிகையின் திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

உலக நாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான இந்தியன் 2... இயக்குனர் ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

உலக நாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான இந்தியன் 2... இயக்குனர் ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக வந்த அயலான் படத்தின் அட்டகாசமான அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்
சினிமா

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக வந்த அயலான் படத்தின் அட்டகாசமான அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்