தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா புதிய நோயாக இருப்பதால், உலகளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், பாதிப்பிலிருந்து குணமடைந்துவருவோரின் எண்ணிக்கை தற்போது 54 சதவிகிதமாக உள்ளது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

“வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களாலேயே கொரோனா பரவுகிறது” என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.

“கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

குறிப்பாக, “கொரோனாவை தடுக்கவே முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிக்க இதுவரை முடிவு செய்யவில்லை என்றும், முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

“இதனால், கொரோனாவை ஒழிக்கப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முக கவசம் தான் தற்போதைக்கு ஒரே வழி” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.