கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய - மாநில அரசுகள் போராடி வருகிறது. ஆனாலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு மற்றும் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது போலவே, தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை, 144 தடை உத்தரவை முதலமைச்சர் பழனிசாமி பிறப்பித்தார்.

அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வீதிகளில் 5 பேருக்கு மேல் சேர்ந்த போக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஏப்ரல் 1 வரை பேருந்துகள், கால் டாக்ஸி, ஆட்டோ, லாரிகள் ஓடாது என்றும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனால், “அனைவரும் வீட்டில் இருப்போம், கொரோனா என்னும் சமூக தொற்றை மேலும் பரவால் ஒற்றுமையுடன் தடுப்போம்!” என்று வாசகர்களை கலாட்டா கேட்டுக்கொள்கிறது.