திருச்சி அருகே அண்ணியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த தம்பியை, அண்ணனே தீர்த்துக்கட்டிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

திருச்சி மாவட்டம் பிடாரப்பட்டியை சேர்ந்த 23 வயதான பழனிச்சாமி, லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். 

இதனிடையே, நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் உள்ள தனது அண்ணன் 35 வயதான ஜெயராஜ் வீட்டில் தங்கி பழனிச்சாமி, வேலை பார்த்து வந்தார்.

Man kills brother after finding affair with wife

அப்போது, ஜெயராஜ் மனைவிக்கும், பழனிச்சாமிக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. ஜெயராஜ் வேலைக்குச் சென்ற உடன், தினமும் பழனிச்சாமியும் - அவரது அண்ணியும் சேர்ந்து தனிமையில் உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளனர்.

இப்படியாக சில மாதங்கள் இவர்களது உல்லாச வாழ்க்கை சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் ஜெயராஜிக்கு இவர்களது கள்ளக் காதல் தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், மனைவி மற்றும் பழனிச்சாமியை அழைத்து கண்டித்துள்ளார். இதனால், கணவருடன் சண்டை போட்டுவிட்டு, அவரது மனைவி அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

அம்மா வீட்டிற்குச் சென்ற பிறகும், இவர்களது கள்ளக் காதல், எந்த தடையும் இல்லாமல் சுகமாய் சென்றுள்ளது.

இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயராஜ், தனது தம்பியால் தான், தன் குடும்பத்தில் மனைவி உடன் சண்டை வந்ததை உணர்ந்த அவர், தம்பியை அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஜெயராஜை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், வடமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்த ஜெயராஜ், மனைவி மற்றும் தம்பி இடையே இருந்த கள்ளக் காதல் குறித்துக் கூறி உள்ளார். இதனையடுத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை
நடைபெற்று வருகிறது.

https://d1ydle56j7f53e.cloudfront.net/assets/general-images/1584967018FotoJet-2020-02-06T183854.652.jpg

இதனிடையே, அண்ணி மற்றும் கொழுந்தன் இடையே நிகழ்ந்த கள்ளக் காதல் மற்றும் அதனால் ஏற்பட்ட கொலை சம்பவம், திருச்சி அருகே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.