தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக இன்றுடன் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

TN CM announces 1000rs for each ration card corono

இந்நிலையில், இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியதும், முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு இன்று முதல் அமலாக உள்ளதால், 3,250 கோடி ரூபாய் மதிப்பாலான நிவாரணங்களைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

TN CM announces 1000rs for each ration card corono

அதன்படி, 

- தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.
- நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
- ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.
- ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும்.
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  மார்ச் மாத ரேசன் பொருட்களை ஏப்ரல் மாதம் பெற்றுக்கொள்ளச் சிறப்பு ஏற்பாடு. அப்போது, விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.
- ஆட்டோ தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
- ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
- நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
- 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும். 

என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.