கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு, நள்ளிரவு முதல் அமலானது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்குப் பரவி உள்ளது. இந்த கொரோனாவின் கோர பிடிக்கு இந்தியாவும் தப்பவில்லை. தமிழகமும் தப்ப வில்லை.

இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 22 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி.

இதன் காரணமாக, அன்றைய தினம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அன்று ஒரு நாள் இந்தியாவே வெறிச்சோடியது. அன்றைய தினம் கொரோனா என்னும் கொடிய நாய் யாருக்கும் பராவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்த நாட்கள் வழக்கம் போல் செயல்பட்டதால், தற்போது வரை இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500 யை தாண்டியது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா மேலும் பரவால் தடுக்கும் நோக்கில், பிரதமர் மோடி, நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலானது.

மேலும், இது தொடர்பாகப் பேசிய பிரதமர் மோடி, “மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் பேராபத்து நேரிடும்” என்று எச்சரித்தார்.

அத்துடன், “நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

“கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்குத் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், நோய் தாக்கியவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.