லவ் டார்ச்சரால், பேராசியர் ஒருவர் கல்லூரி வாசலிலேயே தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில், 25 வயது அங்கிதா பிசுட் என்ற இளம் பெண் ஒருவர் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவரை, அங்குள்ள தரோடா கிராமத்தைச் சேர்ந்த விக்கி நாக்ரலே என்பவர், கடந்த 2 ஆண்டுகளாக பின் தொடர்ந்து வந்து, லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

விக்கி நாக்ரலேவுக்கு திருமணம் ஆகி 7 மாதத்தில் குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அந்த கல்லூரி பேராசிரியரின் பின்னாடியே சுற்றி, அவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் லவ் டார்ச்சர் அதிகமானால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், “எனக்குக் கல்யாணமாகி குழந்தை இருக்கிறது.. என்னை விட்டுடு ப்ளீஸ்” என்று அவனிடம் கெஞ்சி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவன், அந்த இளம் பெண்ணை ஃபாலோ பண்ணி சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் பேருந்திலிருந்து இறங்கி, கல்லூரிக்கு நடந்து வரும் வழியில், கல்லூரி வாசலில் வந்து வழி மறித்து நின்ற விக்கி, அந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்து எரித்துள்ளார்.

இதில், அந்த பெண்ணின் மீது தீ பற்றி எரிந்த நிலையில், விக்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, அந்த வழியாகப் பேருந்தில் சென்றவர்கள், இறங்கி அருகிலிருந்த தண்ணீரை அந்த பெண்ணின் மீது ஊற்றி, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமித்தனர்.

40 சதவீத தீ காயங்களுடன், அங்கிதாவுக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

அங்கிதா உயிரிழந்த தகவல் வெளியானதும், அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு, மாணவியின் உடலை வாங்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, இளம் பெண்ணை தீ வைத்து எரித்தது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், விக்கியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விக்கி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.