கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில், மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது.

prostitution in massage parlour 3 women in custody

இந்த மசாஜ் சென்டரில், ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில், தொடர்ந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கரூர் நகர போலீசார், கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, அங்கே 3 பெண்கள், 2 ஆண்கள்  இருந்துள்ளனர். இதனையடுத்து, அந்த 5 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அத்துடன், ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு பூட்டுப் போட்டனர். 

பின்னர், காவல் நிலையத்தில் வைத்து 5 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக அந்த பகுதியில் செய்தி பரவியதால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.