இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து, வானில் நடந்து காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹமிஷ் பிரஸ்ஸட் என்னும் இளைஞர், புதிய சாகசம் செய்ய திட்டமிட்டார்.

Youth jumps off American plane viral video

அதன்படி, அடிக்கடி வானில் பறக்கும் பழக்கம் கொண்ட அவர், தன் பழக்கத்திலேயே சிறிது வித்தியத்தைச் செய்ய வேண்டும் என்று யோசித்தார்.

இதனையடுத்து, கலிபோர்னியாவில் தனது நண்பர்களுடன் சிறிய ரக விமானத்தில் பயணித்தார். அப்போது, அங்குள்ள எல்சினோர் ஏரியின் மேற்பரப்பில், பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் மேலே சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்து ஹமிஷ் கீழே குதித்தார்.

Youth jumps off American plane viral video

அந்த தருணத்தில், வானில் பறந்துகொண்டிருக்கும்போது, கண்ணாடியில் நடப்பது போன்று, பாவனை செய்து, நடந்து காட்டினார்.  

மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி கீழே விழுந்து கொண்டிருந்த நேரத்தில்,  ஹமிஷ் பிரஸ்ஸட்டின் குறும்பு நடை, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.