இந்தியாவில் ஆன்லைன் மூலம் நடந்த திருமண நிச்சயதார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா, பழமையான பண்பாடும்.. கலாச்சாரமும்.. கொண்ட பழம் பெருமைகள் கொண்ட நாடு. ஆனால், மாறி வரும் புதிய தொழிற் நுட்பத்திற்கு ஏற்ப, அதற்கு நாம் 'புதிய இந்தியா' என்று பெயர் வைத்து அழைக்கிறோம்.



மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல, மாறி வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப, இவ்வுலகில் எல்லாமா அதிநவீனமாக மாறி வருகிறது. தொழில், நுட்பமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

கடை விரித்து விற்பனை செய்த காலம் மாறி, ஆன்லைன் மூலம் விற்பனை, ஆன்லைன் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் மூலம் வரன் தேடுவது என்று நேற்று வரை நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால், இன்று ஒருபடி மேலே போய், இந்தியாவில் ஆன்லைன் மூலம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்த இரு குடும்பங்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தங்களது பிள்ளைகளுக்காக வரன் தேடி உள்ளனர்.

அப்போது, அவர்களுக்கு ஒரு வரன் கிடைத்துள்ளது. ஆனால், மாப்பிள்ளையும் - பெண்ணும் வேறு வேறு நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.

இதனால், இன்று திருமண நிச்சயதார்த்தம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்தனர். ஆனால், இருவருக்கும் இந்தியா வந்து செல்ல லீவு கிடைக்கவில்லை.

இதனால், வித்தியாசமாக யோசித்த இரு வீட்டாரும்.. நிச்சயதார்த்தத்தின்போது, ஒரு செல்போனில் வீடியோ காலில் மாப்பிள்ளை இருக்க, மற்றொரு செல்போன் வீடியோ காலில் பெண் ஆன்லைனில் இருந்துள்ளார்.

2 பேருடைய செல்போனையும் மண மக்கள் அமரும் இருக்கையில் தனித் தனியாக வைத்து, அந்த செல்போனில் அவர்கள் ஆன்லைனில் இருந்தவரே, முறைப்படி நிச்சயதார்த்தம் சம்பிரதாயங்கள் நடைபெற்றன.

#Engagement ceremony happening online it seems. Can't believe this is happening in 2020. Looks like by 2040 even #weddings will happen through #Internet 😱😱😱😱 #wednesdaymorning #WednesdayThoughts pic.twitter.com/4ihDEYYkgP

— Anusha Puppala (@anusha_puppala) February 12, 2020

குறிப்பாக, வழக்கம் போல் நடைபெறும் நிச்சயதார்த்தம் போலவே, இந்த நிச்சயதார்த்தத்திலும் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.

அதேபோல், மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் நிச்சய புடவையை, செல்போன் மீது வைத்தனர். மேலும், பெண்ணின் நெற்றியில் வைக்கப்படும் குங்குமத்தை, செல்போனில் வைத்தனர். அதனை, ஆன்லைனில் இருந்த பெண் ஏற்றுக்கொண்டார்.

இந்த ஆன்லைன் நிச்சயதார்த்த விழாவிற்கு, இருவீட்டார் உறவினர்களும் பலரும் வருகை தந்திருனர். தற்போது, இந்த நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.