சினிமா பாணியில் பிரான்ஸ் நாட்டின் ஈபிள் டவர் முன்பு, இந்திய வம்சாவளி சேர்ந்தவர், தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

Cinema style love proposal in front of Eiffel Tower

இந்திய வம்சாவளி சேர்ந்த சியாம் ஷா, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பணியாற்றி வருகிறார். 

Cinema style love proposal in front of Eiffel Tower

இவரும், மும்பையில் பணிபுரிந்து வரும்  சிவானி பாப்னாவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நண்பர்களாகப் பழகி வந்தனர். 

இதில், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்ட நிலையில், ஒருவருக்கு ஒருவரை பிடித்துள்ளது. 

Cinema style love proposal in front of Eiffel Tower

இந்த நட்பின் பழக்கத்தில், தன்னுடைய தோழிக்கு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் மிகவும் பிடிக்கும் என்பதை, காதலன் அறிந்துகொண்டார். 

இந்நிலையில், தோழி மீது காதல் வயப்பட்ட சியாம் ஷா, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், தோழி சிவானி பாப்னாவை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் முன்பு வரவைத்துள்ளார்.

Cinema style love proposal in front of Eiffel Tower

ஈபிள் டவர் முன்பு தோழி சிவானி பாப்னா, வந்தவுடன், சியாம் ஷா சினிமா பட பாணியில், இந்தி மொழியில் பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடி, தன்னுடைய காதலை, தோழியிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

Cinema style love proposal in front of Eiffel Tower

இதனால், இன்ப அதிர்ச்சியில் தத்தளித்த சிவானி பாப்னாவும், காதலை ஏற்றுக்கொள்ள, அவர் விரலில் மோதிரம் ஒன்றை பரிசளித்து, ஆர கட்டித் தழுவினார். இதனை, அங்கு கூடியிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். 

Cinema style love proposal in front of Eiffel Tower

இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அதிகம் பேரால் வாழ்த்துக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், காதலர்கள் இருவரும் வாழ்த்து மழையில் நினைத்து வருகின்றனர்.