தாய் உட்பட குடும்பமே 11 மாத குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில், 17 வயதான சுஷ்மிதா ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும்போது, 18 வயதான அமல்ராஜ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

Mother kills 11 month baby by drowning in Virudhunagar

அப்போது, இவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

18 வயது கூட பூர்த்தியாக அந்த பெண், தன் காதலனுடன் அடிக்கடி உல்லாச இன்பம் அனுபவித்ததால், அந்த பெண் கரு உற்றாள். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள், அமல்ராஜ் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி, இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றபோது, சுஷ்மிதா வயிற்றில் 7 மாத கரு வளர்ந்துகொண்டிருந்தது.

Mother kills 11 month baby by drowning in Virudhunagar

சுஷ்மிதா - அமல்ராஜ் தம்பதிக்குத் திருமணம் முடிந்த அடுத்த 3 வாது மாதத்தில், அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. அப்போது, குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்று கூறி அமல்ராஜ், மனைவி சுஷ்மிதாவுடன் அடிக்கடி சண்டைக்குச் சென்றுள்ளார்.

Mother kills 11 month baby by drowning in Virudhunagar

மேலும், இவர்களது மன வாழ்க்கைக்குப் பிறந்த 11 மாத குழந்தை விகாஸ் தடையாக இருப்பதாக நினைத்த அமல்ராஜின் பெற்றோர், குழந்தையைக் கொன்றுவிடுமாறு மகனிடமும், மருமகளிடம் கூறி உள்ளனர். 

இது குறித்து, குழந்தையின் தாய் சுஷ்மிதா, தனது தந்தையிடம் கூற, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த 5 ஆம் தேதி 11 மாத ஆண் குழந்தையை, தாய் உள்பட அமல்ராஜின் குடும்பமே சேர்ந்து தண்ணீர் தொட்டியில் அமுக்கி குழந்தையைக் கொன்றுள்ளது.

Mother kills 11 month baby by drowning in Virudhunagar

பின்னர், குழந்தையைக் கொன்றது தொடர்பாக அமல்ராஜ் குடும்பத்துக்கும், சுஷ்மிதா குடும்பத்துக்கும் பிரச்சனை எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, தன் குழந்தையை தன் கணவனே தண்ணீரில் அமுக்கி கொன்றுவிட்டதாக, மனைவி சுஷ்மிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கண்டனர். விசாரணையில், தாய் சுஷ்மிதா உள்பட குடும்பமே சேர்ந்து 11 மாத குழந்தையைக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து. இவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.