கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பால், பலரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அறிகுறிகளே இல்லாமலும் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா காலத்தில் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் அனைவரும் கொரோனா அறிகுறியால், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், பலர் கொரோனா சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சிலர் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி,

- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது முக்கியம்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற அக்கம் பக்கத்தினர் உதவ வேண்டும்.

- கொரோனா நோயாளிகளை மறைத்து வைப்பது சம்மந்தப்பட்ட குடும்பத்துக்கு மட்டுமின்றி, அக்கம் பக்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆபத்தாக மாறும்.
- கொரோனா தொடர்பான லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், அறிகுறி தென்பட்ட நாள் முதல் அடுத்த 17 நாட்களுக்குள், வீட்டில் தங்கள் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- 10 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லாதவர்களும் தங்கள் தனிமைப்படுத்துதலை முடித்துக்கொள்ளலாம்.
- தனிமைப்படுத்துக் கொண்டவர்களை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள, ஒரு உதவியாளர் இருப்பது அவசியம்.
- வீடுகளில் போதிய மருத்துவ வசதிகள் இருப்பது அவசியம்.
- கொரோனா நோயாளிகள், லேசான, மிதமான, தீவிர என்று 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.
- இதில், லேசான அறிகுறி இருப்பவர்கள், அவர்களது மருத்துவ நிலவரத்தைப் பொருத்து, பரிசோதனை நடத்தப்படாமலே வீட்டுக்கு அனுப்பப்படுவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.