ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஊரடங்கு காலகட்டத்தில் அறிவிக்கப்படும் தளர்வு காரணமாக, இதுவரை மூடப்பட்டு தற்போது திறக்கப்பட இருக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Regulation for industries during lockdown

மத்திய உள்துறை அமைச்சகமும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

அதன்படி, 

- தொழிற்சாலைகள் இயக்கப்படும் முதல் வாரத்தை, சோதனைக் காலமாகக் கருதி, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

- தொழற்சாசலைகள், முதல்வராத்தில் அதிக உற்பத்தி இலக்கை நிர்ணயிக்கக் கூடாது. 

Regulation for industries during lockdown

- தொழற்சாசலைகளில் இயந்திரங்களை இயக்கத் தொடங்கும்போது, வித்தியாசமான சத்தமோ அல்லது வித்தியாசமான வாசனையோ வந்தால், அந்த இயந்திரம் சரி செய்யப்பட வேண்டும். அல்லது அந்த இயந்திரத்தை நிறுத்திவிட வேண்டும்.

- ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்தில், இயந்திரங்களின் இயக்கம் முறையாகத் தொடங்கப்படுவதையும், முறையாக நிறுத்தப்படுவதையும் நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

- தொழிற்சாலைகளின் இயக்கம் தொடங்கும் முன்பாக பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
நாட வேண்டும்.

- தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, சேமிக்கும் கிடங்குகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறாக, புதிய விதிமுறைகளை அனைத்து தொழிற்சாலைகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.