கொரோனாவுக்கு, இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 54 நாட்கள் பொதுமுடக்கம் அமலிலிருந்து வருகிறது. 

States without corona cases in India

இதனால், நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தற்போது வரை, இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,152 க உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,452 லிருந்து 20,917 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

States without corona cases in India

இப்படியாக, இந்தியா முழுவதும் கொரோனா பரவி உள்ளதாக நம்பப்பட்டு வந்த நிலையில், உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து, இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தப்பித்துள்ளது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மிசோரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும், தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாகவே, இந்த குறிப்பிட்ட மாநிலங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று பரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில், அங்குள்ள பக்கத்து மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அசாமில் 63 பேரும், திரிபுராவில் 134 பேரும், மேகாலயாவில் 13 பேரும் என்று, மிக குறைந்த அளவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. அந்தமான், நிக்கோபார் தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33 பேரும், தற்போது குணமடைந்துள்ளனர். 

இதனைத் தவிர்த்து மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம், இந்தியாவின் சில மூலைகளில் கொரோனா வைரஸ், இன்னும் பரவவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக தற்போது பார்க்கப்படுகிறது.