அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக அவரது காதலியே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

உலகின் முன்னணி ஆன்லைன் நிறுவனமாக அமேசான் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்நிலையில், அமேசான் நிறுவனத்தை அதன் நிறுவனர் ஜெப் பெசோசின், தொடங்குவதற்கு முன்பே 1993 ஆம் ஆண்டு, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகே, 1994 ஆம் ஆண்டு, அமேசான் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக ஜெப் பெசோசின் - மக்கின்சி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இருவரும் விவாகரத்து செய்வதாக உலகிற்குத் தெரிவித்தனர்.

அத்துடன், கடந்த 2019 ஆம் ஆண்டு, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் அந்தரங்கப் படங்கள் வெளியானதாகச் செய்திகள் பரவியது. இது தொடர்பாகச் சவுதி அரேபியா அரசுக்குத் தொடர்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அமேசான் நிறுவனரின் காதலியான, லாரன் சான்ச்செஸின் சகோதரர் மைக்கேல் தான், இந்த அந்தரங்க விசயங்களை வெளியிட்டது என்றும், அவருக்கு இவற்றையெல்லாம் கொடுத்தது, அவரது சகோதரி லாரன் சான்ச்செஸின் தான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதனிடையே, உலகின் நம்பர் ஒன் பணக்காரரின் அந்தரங்க விசயங்களை, அவரது காதலியின் மூலமே வெளியான சம்பவம், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.