இந்திய எல்லைப் பிரச்சனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார்நிலையில் நிறுத்தியுள்ளது. இதனை விமானப் படை தலைமை தளபதி நேரில் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய - சீன எல்லைப் பிரச்சனை குறித்து மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, “நாட்டில் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை என்றும், சீனா ராணுவம் இந்திய எல்லையில் ஊடுறவவில்லை என்றும் கூறினார்.

இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதன்படி,

“இந்திய எல்லையில் எந்த சீனர்களும் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்; அப்படியானால், மே 5 - 6 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “ஜூன் 16 ஆம் தேதி இருநாட்டுத் துருப்புக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது ஏன்?” என்றும், அடுத்த கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, “இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது?” என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்துள்ளார். தற்போது, ப.சிதம்பரம் முன்வைத்துள்ள கேள்விகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.