“சாவிலாவது நாங்கள் ஒன்று சேருகிறோம்!” என்று கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காதல், பாலியல் இச்சையின் உணர்வு பூ என்றால்.. கள்ளக் காதலை எதைக்கொண்டு வகைப்படுத்துவது??

இல்லறம் கசக்கும் போது, கள்ளக் காதல் மட்டும் இங்கே இனித்துக் கிடப்பது எப்படி சாத்தியம்?

கள்ளக்காதல்.. ஆபாசம், அழுக்கு, பாவம் என்ற அசிங்கமான நிலைகளையும் தாண்டி எப்படி கொடிகட்டிப் பறக்கிறது?

கண்ணை மறைக்கும் காமத்திற்கு அங்கிகாரம் தேடுவது முறையா?

என்று ஆயிரமாயிரம் கேள்விகள்.

காதலுக்காகப் போராடி உயிர் நீத்த காதலர்களுக்கு மத்தியில், தனித் தனியாக குடும்பமும், குழந்தைகளுமாக வாழ்ந்து வந்த இருவர், கள்ளக் காதலால் ஈர்க்கப்பட்டு அங்கிகாரம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட சாகத் துணிகிறார்கள் என்றால், நாம் எங்கே சென்றுகொண்டு இருக்கிறோம்?

இந்த சமூகம் எதை நோக்கிப் பயணப்படுகிறது?
இந்த அசிங்கத்திற்கு யார் பொறுப்பேற்பது?

அடங்கி வாழ வேண்டும் என்பதைக் காட்டிலும், அடக்கமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏன் எழாமல் போனது?

பெற்றோரில் ஒருவரை இழந்து, குழந்தைகள் ஆரோக்கியமான சூழ்நிலையில் வளர்ந்துவிடுமா? வாழ்ந்துவிடுமா??

குழந்தைகள் இருக்கும்போது, குடும்பம் மற்றும் எதிர்கால பொறுப்புணர்வை மறந்து, சாகத் துணிந்தது மடமையிலும் மடமைத்தனம் இல்லையா? அப்படிப்பட்ட ஒரு மடமைத் தனம் தான், கேரளா ஜோடிகளால் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தட்டாரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான போஸ், அங்குள்ள காசனூரில் காவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், காசனூரைச் சேர்ந்த 34 வயதான சுப்ரியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுப்ரியாவுக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

ஆனால், இவர்களுக்குள்ளான பழக்கம் கள்ளக் காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த கள்ளக் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிந்த நிலையில், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், மனமுடைந்த கள்ளக் காதல் ஜோடி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கன்னியாகுமரி வந்துள்ளனர். அங்கு, ஒரு தனியார் விடுதியில் இருவரும் கணவன் - மனைவி எனக் கூறி, ரூம் எடுத்துத் தங்கி உள்ளனர்.

ரூம் உள்ளே சென்றவர்கள் மறுநாள் காலை வரை கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவைத் தட்டி உள்ளனர். ஆனால் பதில் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு, சுப்ரியா விஷயம் அருந்திய நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்துள்ளார். விடுதி ஊழியர்கள் என்னாச்சு என்று கேட்டுள்ளனர். அதற்கு, “எங்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு என்றும், இதனால், சாவிலாவது நாங்கள் ஒன்று நேர முடிவெடுத்து இருவரும் ஒன்றாக விஷம் குடித்ததாகவும்” கூறியுள்ளார்.

இதனால் பதறிப்போன விடுதி ஊழியர்கள், “போஸ் எங்கே?” என்று கேட்டுள்ளனர். “அவர் முதலில் விஷம் குடித்ததால், அதிகமாக வாந்தி எடுத்ததாகவும், இதனால் கடற்கரை பக்கம் சென்றதாகவும்” கூறியுள்ளார்.

இதனையடுத்து, சுப்ரியா மற்றும் போஸ் ஆகிய இருவரையும் அங்கிருந்து அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், போஸ் பரிதாபமாக உயிரிழந்தார். சுப்ரியா உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுப்ரியா - போஸ் இருவரும் கல்லூரி கால நண்பர்கள் என்பதும், இருவரும் படிக்கும்போதே காதலித்து வந்ததும் தெரியவந்தது.

சமூகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள இருவர், கள்ளக் காதலுக்காக உயிரை விட்டதும், உயிரை விட துணிந்ததும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த கள்ளக் காதல் கதையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதே, நமக்கான கேள்வி? எதை தெரிந்துகொண்டோம் என்பதே நமக்கான வாழ்வியல் பாடம்!