6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி 3 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதல், அன்பின் வழியே தோன்றும் ஒரு உணர்வின் பிழம்பு! காமம், உணர்வின் வழியே தோன்றும் உணர்ச்சியின் பிழம்பு!!

காதல், ஒருவரிடம் மட்டுமே தோன்றும். அது, அன்பால் நிறைந்திருக்கும். காமம், ஒவ்வொருவரிடமும் தோன்றும். அது உணர்ச்சியால் உந்தப்பட்டு, மோகத்தால் நிறைந்து காணப்படும். 

காதலென்னும் அன்பு, வாழ்வியலுக்கான ஒரு பாதை. காமமென்னும் மோகம், வாழ்வியலிலிருந்து விலகி நிற்கச் செய்யும் ஒரு போதை. இந்த போதை தலைக்கேறித்தான், இங்கே தெருவில் செல்லும் தேவதைகளை, நிறையப் பேர் கசக்கிப் பிழிந்து சூறையாட பார்க்கிறார்கள்.

அதனால் தான், அடுப்படியிலிருந்து வீதிக்கு வந்த பெண்கள், மீண்டும் அடுப்படியிலேயே முடங்கும் அபாயம் மீண்டும் நிழலாடுகிறது.

Vellore schoolgirl sexual assault 3 arrested

அப்படிப்பட்ட அபாயகரமான ஒரு நிகழ்வுதான், 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு, அதுவும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. 

சிறகு முளைத்ததும், எப்படியெல்லாம் சிறகடிக்கலாம் என்று கனவு கண்ட பெண்ணை, சிறகே.. முளைக்க முடியாத அளவுக்கு, கனவு என்னும் இடுப்பு எலும்பை உடைத்து, மூலையில் முடக்கிப் போட்ட சில மூதேவிகளின் அரங்கேற்றிய காம களியாட்ட கதை இது..   

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது இளம் சிறுமி ஒருவர், வீட்டில் கழிவரை வசதிகூட இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். 

Vellore schoolgirl sexual assault 3 arrested

சிறுமி மட்டுமல்ல, சிறுமியின் குடும்பமே, இயற்கை உபாதை போக வேண்டும் என்றால், ஒன்று அதிகாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் அல்லது மாலை 6 மணிக்குப் பிறகு இரவு வரும் வரை காத்திருக்க வேண்டும். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அகப்பட்ட ஒரு இளம் சிறுமி, மாலை இரவு தொடங்கியதும் இயற்கை உபாதைக்காக, அந்த பகுதியில் உள்ள பலாற்று கரையோரம் ஒதுங்கி உள்ளார்.

அப்போது, அந்த பகுதியில் 24 வயதான சந்துரு, 30 வயதான கண்ணன், 21 வயதான பார்த்திபன் ஆகிய 3 பேரும் மது அருந்திக்கொண்டு இருந்தனர். சிறுமியைப் பார்த்ததும், சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அப்படியே வாயைப் பொத்தி அங்கிருந்து மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்று, ஆடைகளை அவிழ்த்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

அவர்களின் காம களியாட்டத்தில் துடித்துப்போன 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது இளம் பிஞ்சு, வலியால் அழுது துடித்துள்ளது. உயிர் போகும் அளவுக்குக் கத்தி கூச்சலிட்டுள்ளது. ஆனால், 3 பேருக்கும் காமம் உச்சம் பெற்று இருந்ததால்,  சிறுமியின் ஒரு துளி கண்ணீர்கூட, அவர்களைக் கரைக்கவில்லை.

Vellore schoolgirl sexual assault 3 arrested

ஆசை தீர, காமம் வற்றும் அளவுக்கு, இச்சைகளை எல்லாம் தீர்த்து முடித்தபிறகு, அந்த சிறுமியை விடுவித்து உள்ளனர். அத்துடன், இதைப் பற்றி வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால், வீடு திரும்ப ஆடை கூட இல்லாமல் நள்ளிரவில் பரிதவித்த சிறுமி, அங்குள்ள சுடுகாட்டில் பிணத்தின் மீது போற்றப்பட்டுக் கிடந்த ஆடைகளை எடுத்து, போர்த்துக்கொண்டு நடக்க முடியாத மாற்றுத் திறனாளி போல், அங்கிருந்து, தாங்கி தாங்கியே வீடு திரும்பி உள்ளார்.

வீட்டில் பெற்றோரைப் பார்த்ததும், மிச்சம் மீது இருந்த கொஞ்ச நஞ்ச கண்ணீரையும் கொட்டித் தீர்த்து, தனக்கு நேர்ந்த அவலங்களைக் கூறி, மரண ஓலமிட்டுள்ளார். 

ஆனால், கோப படவேண்டிய சிறுமியின் பெற்றோர், உயிர் பயத்தில் இதை வெளியே சொல்லாமல், அப்படியே மூடி மறைத்துள்ளனர். 

இதை கேள்விப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர், சிறுமியை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 காமுகர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏழ்மை பொருந்திய ஒரு சிறுமியை, அவள் சூழல் தெரிந்தும், 3 பேர் சேர்ந்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியை நாசம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்க களமிறங்குகிறதா காமுகர் கூட்டம்?!