கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு எதிராக எந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று பலரும் தேடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.

அத்துடன், கொரோனாவுக்கு தனிமை ஒன்றே தீர்வு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில், 'உணவே மருந்து' முறையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால், கால்சியம் நிறைந்த உணவுகளைப்ப் பலரும் தேடிச் சாப்பிட்ட தொடங்கி உள்ளனர். அத்துடன், கொரோனாவுக்கு எதிராக எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும், பலரும் பலரிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், இணையத்தில் இது தொடர்பான விவாதம் நீள்கிறது.

இந்நிலையில், “காய்கறிகளிலேயே ப்ரக்கோலிதான் என்னும் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

காய்கறிகள் தவிர்த்து, வேறு எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம் என்றும் பலரும் மருத்துவர்களிடம் கேட்கத் தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, “கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானதாகத்த் திகழ்வதாக” மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு எனப் பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்துக் குறைபாடே காரணம் என்றும், பெண்களே கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனாவை விரட்டவும், கால்சியம் பற்றாக்குறையை போக்கவும் சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றுஅரசும், அரசு மருத்துவர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி, பால் மற்றும் பால் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களிலும் கால்சியம் சத்து அதிக அளவில் இருப்பதால், பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ், பனீர், தயிர் போன்றவையும் உண்ணலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பாதாம், மற்றும் நட்ஸ் வகைகளிலேயே கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த நட்ஸ்களில் மெக்னீசியம், வைட்டமின் E போன்ற சத்துக்களும் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருப்பதாகவும், அத்தி மற்றும் காய்ந்த அத்திப் பழம் ஆகியவற்றை அனைவரும் சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

அதேபோல், சிறுதானிய உணவுகள் மற்றும் நட்ஸ்களில் தயாரிக்கப்படும் சத்து மாவு ஆகியவற்றையும் சாப்பிட வேண்டாம் என்றும், தண்ணீர் குடிக்கும் போது, சீரகம் போட்டுக் காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.