“கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அதிபருடன் பேசுங்கள்” என்று எம்.பி. சு.வெங்கடேசன், பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாகத் தமிழக எம்.பி. சு.வெங்கடேசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 12 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Coronavirus Madurai MP letter to PM Modi China help

அதில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதையும், கொரோனா வைரசை சீனா எவ்வாறு முழுமையாகக் கட்டுப்படுத்தியது என்பதையும் அறிய வேண்டும். இதற்கு இந்திய பிரதமர் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

“இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஏகமானதாகப் பரிந்துரைத்திருப்பது, வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நாடுகள் எதிர்கொள்ளும் மருத்துவ அவசரக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்தியாவில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் உண்மையா? விரிவான சோதனைகள் செய்ய இந்தியா இன்னும் ஏன் தயங்குகிறது?” என்றும் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

 “மீண்டும் மீண்டும் சோதனை செய்வது மிக முக்கியமானது என்று ஏற்கனவே பல நாடுகள் கூறுகின்றன. ஆனால், இங்குப் பலருக்கு சோதனை தேவையில்லை என்று நாம் ஏன் இன்னும் பாசாங்கு செய்கிறோம்? ஜப்பானும் - தென் கொரியாவும் பரிசோதனையின் மூலம் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Coronavirus Madurai MP letter to PM Modi China help

“அண்டை நாட்டில் ஒவ்வொரு பத்து லட்சம் பேருக்கு 6 ஆயிரத்து 800 நபர்களைச் சோதிக்கும் போது, ​​நாம் 18 பேரை மட்டுமே சோதிக்கிறோம். ஆரம்பத்தில் அனைவரையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய நிலைப்பாடு மாற்றப்பட்டுள்ளது. நமக்கு போதுமான கருவிகள் கூட இல்லை. அதனால் 

தான், மருத்துவ பரிசோதனைகள் தாமதிக்கப்படுகிறதா?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

“ 'இந்தியாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படலாம். 25 லட்சம் பேர் நோய்வாய்ப்படுவார்கள்' என்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வல்லுநர்களின் கணிப்புகள் உங்களுக்குத் தெரியவில்லையா? மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இங்குத் தொடர்பு எண்கள் கூட இல்லை. அந்த வகையில், இந்த ஆராய்ச்சிகள் அர்த்தமற்றது என நாம் புறக்கணிக்கப் போகிறோமா? இந்த மிக முக்கிய பிரச்சனைகளில் நாம் மௌனமாக உள்ளோம். இதிலிருந்து நாம் என்ன சிந்திக்கிறோம்? என்ன முடிவு எடுக்கிறோம்?” என்றும் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

“மற்ற நோய்களில் போதுமான கவனம் செலுத்தாமல் இருப்பது மற்றும் அவற்றுக்கான வெளிநோயாளி வார்டுகளை மூடுவது ஆபத்தானதல்லவா?” என்றும் வினா எழுப்பி உள்ளார்.

“வாழ்க்கை முறை நோய்களால் ஏற்படும் இறப்புகளை விட, 4 மடங்கு அதிகம் காய்ச்சலால் ஏற்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் முதல் கட்டத்தை எடுக்கத் தயங்குகின்றன என்பது வெளிப்படையானது. அவை சம்பந்தப்பட்ட ஒரு திட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில், அரசாங்கத்தில் 1,750 வென்டிலேட்டர்கள் இருந்தால், தனியார் மருத்துவமனையில் 465 உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் மூன்றில் ஒரு பங்கு இருந்தால், உள்கட்டமைப்பு மற்றும் வலிமை, அவை கொரோனாவுக்கு எதிரான அரசாங்கத்தின் செயல் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டாமா? என்றும் அவர் வினவி உள்ளார்.

“மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் திரவங்களான நிலவேம்பு குடிநீர் அல்லது ஆயுர்வேத காபி தண்ணீர் உள்ளிட்டவற்றை நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எம்.பி. சு.வெங்கடேசன், பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.