தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்ற குறைந்து வந்த நிலையில், சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது பொது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிறன் 2 ஆம் அலையானது மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்து காணப்படுகிறத. இதனால், கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தற்போது உயர்ந்து வருகிறது.

அதன் படி, நேற்றைய தினம் 42,640 பேருக்கு இந்தியா முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளத. ஆனாலும், நேற்றை பாதிப்பை விட இன்றைய கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 3,00,28,709 ஆக உள்ளது. அத்துடன், இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 2.67 சதவீதமாக உள்ளது.

அதே போல், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் மளிகை கடைகளின் செயல்பாடு 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் கோவாக்சின் தடுப்பூசியின் 2 வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கி உள்ளது.

இந்த சூழலில் தான், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று 6,895 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக, சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

அதன் படி, சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது, இன்றைய தினம் 3,351 ஆக அதிகரித்து உள்ளது.

இதனால், கொரோனா பாதிப்பு சதவீதம் 0.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது என, சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தற்போது, சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து உள்ளதால், மண்டல வாரியாக பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி,

மண்டலம் - பாதிப்பு
திருவொற்றியூர் - 96
மணலி - 66
மாதவரம் - 121
தண்டையார்பேட்டை - 272
ராயபுரம் - 240
திருவிக நகர் - 268
அம்பத்தூர் - 201
அண்ணா நகர் - 311
தேனாம்பேட்டை - 348
கோடம்பாக்கம் - 315
வளசரவாக்கம் - 194
ஆலந்தூர் - 137
அடையாறு - 347
பெருங்குடி - 142
சோழிங்கநல்லூர் - 108
மற்ற மாவட்டங்கள் - 184

மொத்தம் - 3351

என்கிற அளவில் சென்னையில் பொதுமக்கள் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளனர்.