கொரோனா எதிரொலியாக, தமிழகத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் மற்றும் அடிப்படை உதவிகளை தற்போது பார்க்கலாம்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி,

- தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுமார் 7,500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

- இதற்காக, 271 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 மினி வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் முகக்கவசம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

- அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைப்பு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

- அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைப்பதை, அந்த 9 குழுக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

- மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவில் செந்தில் குமார் மற்றும் அதுல்யா மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

- தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மாத தவணைகளை வசூல் செய்ய தற்காலிகமாகத் தடை விதித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

- வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

- கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

- இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்படக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

- ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா 1,000 ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

- அதேபோல், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

- ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் பணச்செலவுக்காக வழங்க வேண்டும் கூட்டுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

- கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர்.

- அதன்படி, அதிமுக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.