உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவிலிருந்து பரவ தொடங்கி கொரோனா வைரஸ் இன்று சுமார் 200 நாடுகளுக்குப் பரவி உள்ளது. இதனால், சுமார் 300 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் உள்ளனர்.

 Corona death count crosses 21 thousand worldwide

இந்த கொரோனா வைரஸ், சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பேயின், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.

சீனாவில் கடந்த சில நாட்களாக யாருக்கும் எந்த பாதிப்பும் காணப்படாத நிலையில். தற்போது புதிதாக 67 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், இத்தாலியில் புதிதாக 5 ஆயிரத்து 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், நேற்று ஒரே நாளில் மட்டும் 683 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 11 ஆயிரத்து 192 பேர் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அதேபோல், இதுவரை ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் ஆயிரத்து 27 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Corona death count crosses 21 thousand worldwide

ஸ்பெயின் நாட்டில் புதிதாக 7 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்பெயினில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 738 பேர் உயிரிழந்திருப்பது ஸ்பெயின் நாட்டையே நிலைகுலையச் செய்துள்ளது. மேலும், ஸ்பெயின் நாட்டில் ஒட்டு மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 647 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேபோல், ஈரானில் 143 பேரும், பிரான்ஸில் 231 பேரும், நெதர்லாந்தில் 80 பேரும், பெல்ஜியத்தில் 56 பேரும் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, நேற்று ஒரே நாளில் மட்டும் உலக அளவில் 2 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தற்போது தாண்டியுள்ளது. அதேபோல், உலக அளவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரத்து 905 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 1 லட்சத்து 14 ஆயிரத்து 218 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்போது வரை மீண்டு வந்துள்ளனர்.