சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில், நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை, கோவை, மதுரையில் கடந்த 26 ஆம் தேதி காலை முதல், இன்று இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல், வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இன்று இரவுடன், அந்த முழுமையான ஊரடங்கு முடிவதால், நாளை ஒரு நாள் மட்டும், இந்த குறிப்பிட்ட 3 மாநகராட்சிகளில் கடைகள் திறக்க சிறப்பு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில், காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

குறிப்பாக, “மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க், தனிநபர் இடைவெளியுடன் பொதுமக்கள் அனைவரும் பொறுமையாகப் பொருட்களை வாங்கலாம்” என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

மே 1 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், பழைய நடைமுறையான காலை 6 மணி முதல், மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கும் நேரக் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.