மங்காத்தா 2 படம் வருமா ? வெங்கட் பிரபுவிடம் கேள்வி !
By Sakthi Priyan | Galatta | November 08, 2018 13:24 PM IST
நவம்பர் 7 நடிகர்களான கமல்ஹாசன், அனுஷ்கா ஷெட்டி, வெங்கட் பிரபு ஆகியோருக்கும் பிறந்தநாள் கொண்டாடினர்.
வழக்கம் போல் வெங்கட் பிரபுவிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். அப்போது எடிட்டர் பிரவீன் KL வெங்கட் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு மங்காத்தா 2 எப்போது ? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.
Happy happy birthday to a brother from another mother @vp_offl Thank you sir for bringing us all together to TFI. Love you to the moon and back 😍😍 yeppo sir #mankatha2??
— Editor PraveenKl (@Cinemainmygenes) November 7, 2018
அதற்கு வெங்கட் பிரபு ருசிகரமான தகவல் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கு மட்டும் நன்றி கூறி முடித்துவிட்டார்.
தல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா, அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமாகும். இதன் இரண்டாம் பாகம் வருமா என்ற ஏக்கத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்.