மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் நட்பே துணை.அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் சுந்தர் சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து youtube பிரபலங்களான RJ விக்னேஷ்காந்த்,Eruma Saani புகழ் விஜய் ,ஷா ரா ,ராஜ் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கரு.பழனியப்பன்,கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் போன்ற சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் புதிய பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.அந்த வேங்க மவன் என்னும் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்