தும்பா ப்ரோமோ வீடியோ வெளியானது !
By Sakthi Priyan | Galatta | June 24, 2019 12:44 PM IST
இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளியான அட்வென்ட்சரஸ் ஃபான்டசி திரைப்படம் தும்பா. தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
சிறு சிறு வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டும் இளைஞராக வருகிறார் தர்ஷன். பின்பு பெயிண்ட்டர் தீனாவுடன் சேர்ந்து காட்டில் வேலை பார்க்க செல்கிறார் தர்ஷன். இதற்கிடையே காட்டில் படமெடுக்க விரும்பும் வைல்ட் லைஃப் புகைப்பட கலைஞராக வருகிறார் கீர்த்தி பாண்டியன். இந்த மூவரும் புலி இருக்கும் டாப் ஸ்லிப்பில் சந்தித்து என்ன செய்கிறார்கள் என்பது தான் கதைச்சுருக்கம்.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியது.