Leaked : தளபதி 63 ஷூட்டிங் வீடியோ ! கடுப்பான ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | March 18, 2019 16:09 PM IST
தளபதி விஜய் நடிப்பில் AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக தளபதியுடன் இணைகிறார்.லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
கதிர்,விவேக்,யோகி பாபு,ஆனந்தராஜ்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.கடந்த மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையின் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது.இதில் விஜயை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்தில குவிகின்றனர்.விஜயும் அவர்களை தினமும் சந்திப்பதும் அந்த வீடியோ வெளிவருவதும் வழக்கமான ஒன்றாக இருந்தது.
ஆனால் தற்போது படத்தின் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது ரசிகர்களையும்,படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பலரது உழைப்பை பாழாக்கும் வண்ணம் இதனை யாரும் பகிர வேண்டாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து படக்குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இதுபோல் விஜயின் மெர்சல்,சர்கார் உள்ளிட்ட படங்களின் காட்சிகள் லீக் ஆகியது குறிப்பிடத்தக்கது.இது போன்ற விடீயோக்கள் இனி வெளிவராமல் இருக்க படக்குழுவினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல ரசிகர்களும் படத்தில் வேலைசெய்யும் பலரின் உழைப்பை கருத்தில் கொண்டு இது போன்ற விடீயோக்களை பகிராமல் இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.