தமிழ் சினிமாவிற்காக மெர்சல் படைத்த இமாலய சாதனை!
By Vinesh RV | Galatta | September 19, 2018 18:06 PM IST
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் கடந்த வருடம் அனைவருக்கு விருப்பமான பாடலாக அமைந்தது.
இந்நிலையில், இப்படம் குறித்து சோனி மியுசிக் ஒரு ட்விட் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ”தமிழ் சினிமாவில் முதல்முறையாக மெர்சல் படத்தின் ஆல்பம் 350 மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளது” என்று பதிவிட்டுள்ளது.
Proud, Prouder, Proudest! #Mersal becomes the First Tamil album to hit 350 MILLION milestone! @arrahman @actorvijay @Atlee_dir @ThenandalFilms @Lyricist_Vivek pic.twitter.com/qNdL5eNaEN
— Sony Music South (@SonyMusicSouth) September 19, 2018