ரத்தத்துடன் நடித்தார் ரஜினிகாந்த் - ஸ்டண்ட் சில்வா !
By Sakthi Priyan | Galatta | November 03, 2018 12:45 PM IST
2.0 படத்தின் ஸ்டண்ட் கோரியோகிராபரான ஸ்டண்ட் சில்வா தனது படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி மேடையில் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலில் ரத்தம் வழிந்ததாகவும், அதை சற்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டாராம் ரஜினிகாந்த்.
இவ்விஷயத்தை இயக்குனர் ஷங்கரிடம் கூறிய பிறகே ரஜினிகாந்த் சிகிச்சை எடுத்துகொண்டாராம். பின்பு மறுநாள் படப்பிடிப்பின் போது சில்வாவிடம், நீங்க சொல்லும் போதே நான் கவனித்திருக்க வேண்டும் என்று பணிவாக கூறினாராம். இதுபோன்ற பணிவு உள்ளதால் தான் அவர் இன்றும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார் என்று கூறியுள்ளார்.