Exclusive : மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய SK-14 படக்குழு !
By Aravind Selvam | Galatta | February 18, 2019 14:59 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் Mr.Local.இதையடுத்து இவர் நடிக்கவுள்ள படம் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் SK-14.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்ற வருட இறுதியில் முடிவடைந்தது .இதையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.Sci-Fic படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.நேற்று Mr.Local இன்று SK 14 என அடுத்தடுத்த அறிவிப்புகள் வருவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர்.இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.