சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷின் ராக்காச்சி ரங்கம்மா பாடல் !
By Sakthi Priyan | Galatta | May 22, 2019 18:00 PM IST
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜீ.வி.பிரகாஷ் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை என இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் சித்தார்த் டிராஃபிக் போலீசாகவும்,ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடிக்கின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. சில நாட்கள் முன்பு படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார்.
தற்போது ராக்காச்சி ரங்கம்மா எனும் பாடலின் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகியது. சித்து குமாரின் இசையில் அனிதா கார்த்திகேயன் பாடிய இந்த பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.