ஓ பேபி படத்தின் மஹா அத்புதம் பாடல் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | June 17, 2019 10:48 AM IST
தென்னிந்திய திரை வட்டாரத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சமந்தா. தமிழில் சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் மஜிலி என அடுத்தடுத்த படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள ஓ பேபி படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் சமந்தாவுடன் முன்னணி நடிகை லக்ஷ்மி, ராஜேந்திர பிரசாத், ரமேஷ், ஊர்வசி, பிரகதி, தேஜா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மிக்கி இசையமைக்கிறார்.
2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படம் மிஸ் கிராணி எனும் படத்தின் தழுவலாக இப்படம் உருவாகியிருக்கலாம் எனத் தகவல்கள் கசிந்து வருகிறது. 70 வயது மூதாட்டி திடீரென 20 வயது குமரியாக மாறியதால் என்னென்ன நடக்கிறது என்பது தான் கதைக்கரு.
தற்போது படத்தின் மஹா அத்புதம் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை நுட்டானா மோகன் பாடியுள்ளார். பாஸ்கர் பட்லா வரிகள் எழுதியுள்ளார்.